எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க..... விடுமுறைக்காக பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மாணவர்கள்
ஈரோடு மாவட்டத்திலுள்ள செட்டிபாளையம் பகுதியில் தனியார் மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் எல்.கே.ஜி முதல் பிளஸ் 2 வரை சுமார் 2500 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் முன்தினம் காலை வழக்கம் போல் பள்ளி செயல்பட்டது. அப்போது பள்ளி அலுவலக பணியாளர் பள்ளிக்கூடத்திற்கு வந்து, மின்னஞ்சல்களை கணினியில் பார்த்துக் கொண்டிருந்தார்.
அப்போது ஒரு மெயிலில் திங்கட்கிழமை காலை 10:30 மணிக்கு பள்ளிக்கூடத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என்ற செய்தி இருந்தது. இதையடுத்து அந்த பணியாளர் பள்ளியின் முதல்வரிடம் கூறினார். இதைத்தொடர்ந்து அனைத்து வகுப்பு ஆசிரியர், ஆசிரியைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் மாணவ, மாணவிகளை மைதானத்திற்கு வரவழைக்கப்பட்டனர்.
அதோடு இந்த விவகாரம் தொடர்பாக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் படி விரைந்து வந்த காவல்துறையினர், வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்பநாய்களை கொண்டு சோதனை செய்தனர். ஆனால் இந்த சோதனையில் சந்தேகம் படும்படியாக எந்த ஒரு பொருளும் கிடைக்கவில்லை. இதனால் அது வெறும் போலி மின்னஞ்சல் என்பது தெரியவந்தது.
வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மரபு நம்பர் யார் என்று காவல்துறையினர் தேடி வந்த நிலையில், அந்த பள்ளியில் புதிதாக சேர்ந்த 2 மாணவர்கள் விடுமுறைக்காக வெடிகுண்டு மிரட்டல்கள் விடுத்ததாக ஒப்புக்கொண்டனர். இதையடுத்து அந்த மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோரை வரவழைத்து அறிவுரை கூறினர். மேலும் மீண்டும் இதுபோன்று நடந்தால் வழக்கு பதிவு செய்யப்படும் என்றும் எச்சரித்தனர்.
No comments