• Breaking News

    வீட்டு வசதி வாரிய வீடுகளின் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு...?

     


    தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் வீட்டு வசதி வாரியம் சார்பில் ஏழை, எளிய மற்றும் நடுத்தர, பொருளாதாரத்தில் பின் தங்கிய மக்களுக்காக வீடுகளை ஒதுக்கி வந்தது. இதற்காக அவர்களிடம் தவணை முறையில் பணம் வசூலிக்கப்படும் நிலையில், தவணை முறையில் பணம் வசூலிப்பதில் சிக்கல் ஏற்படுவதால் அந்த முடிவை கைவிட வீட்டு வசதி வாரியம் முடிவு செய்ததாக சமீபத்தில் தகவல் வெளிவந்தது. இதைத்தொடர்ந்து தற்போது மீண்டும் ஒரு அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. அதாவது தனியாரிடமிருந்து மொத்தமாக நிலங்களை பெற்று வீடுகள் கட்ட வீட்டு வசதி வாரிய முடிவு செய்துள்ளதாம்.

    இதற்காக தமிழகம் முழுவதும் சில மாவட்டங்களில் குறிப்பிட்ட இடங்களை அரசு தேர்வு செய்துள்ளது. அந்த நிலத்தில் குறிப்பிட்ட அளவு மட்டுமே கையகப்படுத்தி வீட்டுமனை திட்டங்களை செயல்படுத்தி வந்த நிலையில், அறிக்கை வெளியிடப்பட்டும் சில நிலங்கள் பயன்படுத்தப்படாமல் இருந்ததால் அந்த குறிப்பிடத்தக்க இடங்களை தற்போது தனியார் கையகப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அந்த நிலங்களை குடியிருப்பு திட்டங்களுக்காக செயல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக மத்திய அரசின் புதிய திட்டத்தின் காரணமாக உரிமையாளர்களுக்கு அதிக விலை கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அத்துடன் அவர்களுக்கு மறுவாழ்வு திட்டங்களையும் செயல்படுத்த வேண்டும். இதனால் தனித்தனியாக உரிமையாளர்களிடமிருந்து நிலத்தை கையகப்படுத்துவதற்கு பதிலாக மொத்தமாக 10 முதல் 100 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் உரிமையாளர்களிடமிருந்து நிலத்தை கையகப்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.

    இதன் மூலம் குடியிருப்பு திட்டங்களை செயல்படுத்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளிவந்த நிலையில், அந்த நிலங்களை புரோக்கர்கள் மூலம் சிலர் தனியார் குறைந்த விலைக்கு வாங்கி அரசிடம் அதிக விலைக்கு விற்பனை செய்ய முயற்சிப்பதாக கூறப்படுகிறது. மேலும் இதனால் தமிழக அரசின் வீட்டு வசதி வாரியம் மூலம் ஒதுக்கப்படும் வீடுகளின் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

    No comments