• Breaking News

    சர்வதேச சிலம்ப போட்டி.... மயிலாடுதுறை ஏவிசி கல்லூரி மாணவி சாதனை


    கோவாவில் நடைபெற்ற சர்வதேச அளவிலான சிலம்ப போட்டியில் ஏவிசி கல்லூரி மாணவி முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.ஏவிசி கல்லூரிஆங்கிலத்துறையில் முதுகலை இரண்டாம் ஆண்டு  பயின்று வரும் மாணவி ஜோ.பிரியா இவர் கோவாவில் நேஷனல் யூத் ஸ்போர்ட்ஸ் அண்ட் எஜுகேஷன் பெடரெட்டின் இந்தியா நடத்திய  சர்வதேச அளவிலான சிலம்ப போட்டியில் கல்லூரி சார்பில் கலந்து கொண்டு முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.

    வெற்றி பெற்ற மாணவியை சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதியரசரும் ஏவிசி கல்வி நிறுவனங்களின் நிர்வாக அதிகாரியுமான கே. வெங்கட்ராமன், பாராட்டி கௌரவித்தார். கல்லூரி முதல்வர் ஆர்.நாகராஜன், நுண்கலை மன்ற ஒருங்கிணைப்பாளர்  ஜி. அமலன் ராபர்ட், ஆங்கிலத்துறை தலைவர்  எஸ்.சந்திரசேகரன் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் ஜ. ராஜ்குமார் மற்றும் பேராசிரியர்கள் ஆகியோர் மாணவிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

    No comments