மெட்ரோ ரயில் திட்டம் திருச்சிக்கு தேவையில்லை என்பதா...? எம்.பி கார்த்திக் சிதம்பரம் மன நோயாளி போல் செயல்படுகிறார்...... பாரத முன்னேற்றக் கழகம் கடும் கண்டனம்
மெட்ரோ ரயில் திட்டம் திருச்சிக்கு தேவையில்லை என்பதா...? எம்.பி கார்த்திக் சிதம்பரம் மன நோயாளி போல் செயல்படுகிறார்.பாரத முன்னேற்றக் கழகம் கடும் கண்டனம்.
இதுகுறித்து யாதவர்களின் அரசியல் கட்சியான பாரத முன்னேற்றக் கழக தலைவர் திரு.பாரதராஜா யாதவ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
திருச்சி மக்களின் நீண்ட கால கோரிக்கைகளில் ஒன்றாக மெட்ரோ ரயில் திட்டம் இருந்து வருகின்றது.தற்போது இந்த மெட்ரோ ரயில் திட்டத்தினை திருச்சிக்கு கொண்டு வருவதற்கான முதற்கட்ட ஆயத்த பணிகளில் மக்கள் பிரதிநிதிகளும்,அரசு அதிகாரிகளும் ஈடுபட்டு வருகின்றனர். இந்த் நிலையில் திருச்சிக்கு மெட்ரோ ரயில் திட்டம் தேவையில்லை என்று சிவகங்கை எம்.பி.கார்த்திக் சிதம்பரம் கூறுவது கேலிக்கூத்தாக இருக்கின்றது.தனது மக்களைவை தொகுதிக்கே பெரிய திட்டங்களை கொண்டு வராமல் கையாளாகாமல் இருக்கின்றார் எம்.பி.கார்த்தி சிதம்பரம்.
இதற்கிடையில் திருச்சிக்கு வரும் திட்டங்களை தேவையில்லை என சொல்வதற்கு இவருக்கு என்ன அருகதை இருக்கின்றது.இப்படி கூறியதற்கு அவருக்கு கடும் கண்டனங்களை தெரிவிக்கின்றோம்.
பப்ளி சிட்டிக்காக சமபந்தமே இல்லாமல் பல விசயங்களில் தான்bதோன்றித்தனமாக மூக்கை நுழைத்து அடிபட்டும் எம்.பி கார்த்திக் சிதம்பரம் திருந்தவில்ல.கிட்ட தட்ட ஒரு மன நோயாளி போல் எம்.பி.கார்த்தி சிதம்பரம் செயல்படுகின்றார்.
ஏற்கனவே எய்ம்ஸ் மருத்துவமனை,மத்திய பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல பெரிய திட்டங்களை இழந்து திருச்சி மற்றும் சுற்று வட்டார மாவட்ட மக்கள் தவிக்கின்றனர்.இதனை எல்லாம் அறியாமல் இனி எவரேனும் திருச்சிக்கு வரும் திட்டங்களை தடுக்கும் வகையில் கருத்து புலி போல் அற்ப கருத்துகளை பகிர்ந்தால் அவர்களை கண்டித்து மக்களை திரட்டி பாரத முன்னேற்றக் கழகம் சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம்.இவ்வாறு பாரத முன்னேற்றக் கழக தலைவர் பாரதராஜா யாதவ் தமது அறிக்கையில் கூறியுள்ளார்.
No comments