மதுரை: புத்தகத் திருவிழாவில் ஆவேசமாக சாமியாடிய பள்ளி மாணவிகள்
மதுரை மாவட்டத்தில் உள்ள தமுக்கம் மைதானத்தில் நேற்று புத்தகத் திருவிழா தொடங்கியது. இந்த புத்தகத் திருவிழா நேற்று தொடங்கிய நிலையில் செப்டம்பர் 16ஆம் தேதி வரை 11 நாட்களுக்கு நடைபெறும். இந்த புத்தகத் திருவிழாவில் கலை நிகழ்ச்சிகள், பிரபல எழுத்தாளர்கள் மற்றும் பட்டிமன்ற பேச்சாளர்கள் கலந்து கொள்ளும் சிந்தனை அரங்கம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்த நிகழ்ச்சிகளில் ஏராளமான பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொள்வார்கள்.
அந்த வகையில் நேற்று நடைபெற்ற தொடக்க விழாவில் அமைச்சர் மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் சங்கீதா உட்பட பல அதிகாரிகள் கலந்து கொண்டனர். அப்போது பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அப்போது கருப்பசாமி வேடமணிந்திருந்த ஒருவர் திடீரென மேடையை விட்டு கீழே இறங்கி வந்து மாணவிகள் இருந்த கூட்டத்திற்குள் நுழைந்து ஆடினார்.அதோடு பக்தி பாடலும் ஒலிபரப்பப்பட்டது. அந்த சாமி பாடலை கேட்டதும் கருப்பசாமி வந்த ஆடியதும் அங்கிருந்த 30க்கும் மேற்பட்ட மாணவிகள் திடீரென சாமியாட ஆரம்பித்துவிட்டனர். அவர்களின் முகத்தில் தண்ணீர் தெளித்து சக மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் இருக்கையில் அமர வைத்தனர்.
இதைத்தொடர்ந்து அந்த மாணவிகளை ஆசிரியர்கள் அங்கிருந்து அழைத்து சென்றனர்.மேலும் நிகழ்ச்சியில் சாமி பாடல் ஒளிபரப்பப்பட்டு மாணவிகள் சாமியாடியதால் அதிகாரிகளுடன் அங்கிருந்தவர்கள் வாக்குவாதம் செய்தனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் பள்ளியில் ஆன்மீக சொற்பொழிவு நடத்திய மகாவிஷ்ணு என்பவரின் சர்ச்சையே இன்னும் அடங்காத நிலையில் புத்தகத் திருவிழாவில் சாமி பாடல் ஒளிபரப்பப்பட்டு மாணவிகள் சாமியாடியது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
No comments