நீலகிரி: காபியில் சயனைடு கலந்து மருகளை கொன்ற மாமியார்

 


நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகையில் ஆட்டோ ஓட்டுநராக வேலை பார்க்கும் ஜவஹருல்லா (50) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு யாஸ்மின் (47) என்ற மனைவியும், இம்ரான் (27), முக்தார் (24) என்ற இரு மகன்களும் இருக்கிறார்கள். இதில் இம்ரான் கடந்த இரு வருடங்களாக ஆஷிகா பர்வீன் (22) என்ற பெண்ணை காதலித்து வந்த நிலையில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். 

முதலில் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் பின்னர் சம்மதம் தெரிவித்து இருவருக்கும் திருமணம் செய்து வைத்தனர். இவர்களுக்கு கடந்த 2021 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்ற நிலையில் 2 வயதில் ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. இதில் மாமியார் மருமகளுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்ட நிலையில், கடந்த ஜூன் மாதம் ஆஷிகா வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார்.

அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டதிலும் உறவினர்கள் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இந்நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கையில் காபியில் சயனைடு எனப்படும் விஷம் கலந்திருந்தது தெரிய வந்தது. இந்த விஷயத்தை வாங்கி கொடுத்த காலிஃப் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

அதோடு அவரின் மாமியார் தான் விஷம் கலந்து கொடுத்ததும் தெரிய வந்ததால் யாஸ்மின், இர்ஃபான் மற்றும் முக்தார் ஆகியோரை கைது செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்து  காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்திவரும் நிலையில் சயனைடு என்பது எளிதில் கிடைக்காது என்பதால் அது எங்கிருந்து கிடைத்தது யார் கொடுத்தது என்பது குறித்தும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

Post a Comment

0 Comments