இந்த ஹோட்டலில் மூச்சு முட்ட தின்றால் 'கோட்' பட டிக்கெட்டுகள் இலவசம்......
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கோட் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிகைகள் லைலா, சினேகா, மீனாட்சி சவுத்திரி, நடிகர்கள் பிரபுதேவா, பிரசாந்த் மற்றும் அஜ்மல் அமீர் ஆகிய பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இந்த படம் செப்டம்பர் 5ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகும் நிலையில் சென்னை ரோகினி திரையரங்கில் ஒரு டிக்கெட் விலை 395 ரூபாயாக இருக்கிறது.
இந்நிலையில் மதுரையில் உள்ள வில்லாபுரம் பகுதியில் இயங்கி வரும் ஒரு ஹோட்டலில் அச்சடித்து ஒட்டப்பட்ட போஸ்டர் தற்போது மிகவும் வைரலாகி வருகிறது. அதாவது அந்த ஹோட்டலில் 2999 ரூபாய்க்கு மேல் அசைவ உணவு சாப்பிட வேண்டுமாம். அப்படி சாப்பிடுபவர்களுக்கு தி கோட் படத்தின் முதல் இரண்டு காட்சிகளுக்கான டிக்கெட் இலவசமாக கிடைக்கும் என்று இருக்கிறது. மேலும் இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.
No comments