மயிலாடுதுறை: மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட பொதுக்குழு மாவட்ட தலைவர் AM.ஜூபையர் தலைமையில் நடைபெற்றது
மயிலாடுதுறை மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட பொதுக்குழு மாவட்ட தலைவர் AM.ஜூபையர் தலைமையில் சீர்காழியில் நடைபெற்றது.இதில் மனிதநேய மக்கள் கட்சி மாநில பொதுச்செயலாளர் ப.அப்துல்சமது MLA., சிறப்புரையாற்றினார்.
தமுமுக மாநில செயலாளர் I.முபாரக் , தமுமுக மாவட்ட செயலாளர் S.சாதிக்பாட்சா, மமக மாவட்ட செயலாளர் கூறைநாடு PM.பாசித் , மாவட்ட பொருளாளர் சீர்காழி A.அப்துல்ரஹ்மான், மாவட்ட துணைத்தலைவர் AR.முபாரக்அலி ,மாநில செயற்குழு உறுப்பினர்கள் SSA.பக்கர், MS.ஆரீப், O.ஷேக் அலாவுதீன் , PSM.புஹாரி, M.ஷேக்தாவூத் , IPP மண்டல செயலாளர் MH.ரியாஜூதீன் உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர்.
மேலும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன....
தீர்மானம் 1
★★★★★★★
தமிழ்நாட்டில் நடைமுறையில் இருக்கும் இஸ்லாமியருக்கான 3.5% இட ஒதுக்கீட்டினை ஏழு சதவீதமாக அதிகரிக்க வேண்டும்...
தீர்மானம் 2
★★★★★★★
ஒன்றிய அரசு கொண்டுவர துடிக்கும் வக்பு வாரிய திருத்த சட்டத்தை அனைத்து எதிர்கட்சிகளும் ஒன்று சேர்ந்து முழு மனதோடு எதிர்க்க வேண்டும்
தீர்மானம் 3
★★★★★★★
மயிலாடுதுறை மாவட்ட மருத்துவக் கல்லூரி மயிலாடுதுறை ஒன்றியத்திற்கு உட்பட்ட கடுவன்குடியில் விரைவில் அமைத்திட வேண்டும்...
தீர்மானம் 4
★★★★★★★
எண்ணை எரிவாயு திட்டங்களால் காவிரி படுகை அடைந்த பாதிப்புகள் பற்றி ஆய்வு செய்ய 2021 இல் தமிழ்நாடு அரசு நியமித்த பேராசிரியர் சுல்தான் இஸ்மாயில் நிறுவனர் குழு 2022 இல் ஆய்வருக்கையை சமர்ப்பித்து விட்டது சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வு அறிக்கையை தமிழ்நாடு அரசு உடனடியாக வெளியிட வேண்டுமெனவும் பேராசிரியர் சுல்தான் இஸ்மாயில் அறிக்கை வெளியிடும் வரை காவிரி படுகையில் என்னை எரிவாயு எடுப்பு தொடர்பாக எந்த செயல்பாட்டையும் நடைபெற கூடாது என்றும் டெல்டா பகுதியில் பாதுகாத்திட வேண்டும்....
தீர்மானம் 5
★★★★★★★
மயிலாடுதுறை தரங்கம்பாடி ரயில் பாதை தடங்களும் விரைவாக அமைத்திட வேண்டும் மயிலாடுதுறை தரங்கம்பாடி ரயில்சேவை தொடங்க வேண்டும்
தீர்மானம் 6
★★★★★★★
விழுப்புரத்தில் இருந்து மயிலாடுதுறை வழியாக தஞ்சாவூர் வரையிலான இரு வழி ரயில் பாதை விரைவில் அமைத்திட வேண்டும்
தீர்மானம் 7
★★★★★★★
மயிலாடுதுறை ஒன்றியத்துக்கு உட்பட்ட நீடூர் ஊராட்சி மற்றும் ஆனந்த தாண்டாவபுரம் ஊராட்சிக்கு இடையிலான பாவா நகர் தார் சாலை கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக போடாததை கண்டித்து விரைவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை போராட்டம் நடத்தப்படும்...
தீர்மானம் 8
★★★★★★★
பாவா நகர் தார்சாலைக்கான பணிகளுக்கான நிதி தமிழ்நாடு அரசின் மூலமாக ஒதுக்கீடு செய்யப்பட்டும் மயிலாடுதுறை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதை இத் தீர்மானத்தின் மூலமாக வன்மையான கண்டனத்தை பதிவு செய்யப்படுகிறது.
என 8வகை தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது இப்பொதுக்குழுவில் மாநில நிர்வாகிகள் , மாவட்ட துணை நிர்வாகிகள், மாவட்ட அணி நிர்வாகிகள், நகர, பேரூர், ஒன்றிய, கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
No comments