வேலூர் மாவட்டத்தில் உள்ள பொம்மன்குட்டை பகுதியில் சேட்-டயானா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதியினருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. கடந்த மாதம் 27-ஆம் தேதி டயானாவுக்கு ஒடுகத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்தது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு பிறந்த 8 நாட்களை ஆன குழந்தை இறந்து கிடந்தது.உறவினர்கள் யாருக்கும் தகவல் தெரிவிக்காமல் வீட்டிற்கு பின்னால் குழிதோண்டி குழந்தையை புதைத்துவிட்டனர்.
இதனால் சந்தேகம் அடைந்த டயானாவின் தந்தை சரவணன் குழந்தையின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் அணைக்கட்டு தாசில்தார் முன்னிலையில் பச்சிளம் குழந்தையின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.இதற்கிடையே சேட்டுவும் டயானாவும் அங்கிருந்து தப்பித்து சென்றனர். குழந்தையின் உடல் மற்றும் தலை பகுதிகளில் எந்தவித காயமும் இல்லை.
வீட்டிற்கு அருகில் இருந்த பப்பாளி மரம் மற்றும் எருக்கஞ்செடி உடைக்கப்பட்டிருந்தது. இதனால் அவற்றின் பாலை குழந்தை கொடுத்து கொன்றிருக்கலாம் என போலீசார் சந்தேகப்படுகின்றனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தப்பி ஓடிய சேட்டு மற்றும் டயானாவை தீவிரமாக தேடி வருகின்றனர்.
0 Comments