உளுந்தூர்பேட்டை அருகே சுற்றுலா வேன் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில், 6 பேர் பலியாயினர். காயமடைந்த 14 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உளுந்தூர்பேட்டை அருகே மேட்டத்தூர் கிராமத்தில், இன்று அதிகாலையில், சுற்றுலா வேன் ஒன்று சாலையோர மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், வேனில் பயணித்த 2 பெண்கள் உட்பட 6 பேர், சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாயினர். படுகாயமடைந்த 14 பேர், விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஆரணி அருகே மாம்பாக்கத்தை சேர்ந்தவர்கள், திருச்செந்தூருக்கு சுற்றுலா சென்றுவிட்டு திரும்பும்போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்து நடந்த இடத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி., ரஜத் சதுர்வேதி ஆய்வு செய்தார்.
0 Comments