பொன்னேரி சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் 5 மணி நேரத்திற்கும் மேலாக சோதனை
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் நேற்று மாலை 4 மணியளவில் திடீரென கார் ஒன்றில் வந்திறங்கிய திருவள்ளுர் லஞ்ச ஒழிப்பு துறை டிஎஸ்பி ராமசந்திர மூர்த்தி தலைமையில் 6 பேர் கொண்ட குழுவினர், சார் பதிவாளர், பத்திரப்பதிவு செய்ய வந்தவர்கள் அலுவலக கிரில் கேட்டை உள்பக்கமாக பூட்டு போட்டனர்.பின்னர், அலுவலகத்தில் விசாரணையை தொடங்கினர்.
அப்போது, பத்திரப்பதிவு அலுவலகத்தின் எதிரில் உள்ள ஆவண எழுத்தர் ஒருவர் வைத்திருந்த கணக்கில் வராத ₹30,000 பணத்தை அலுவலக மதில் சுவர் மீது வீசி எறிய அதனை அதிகாரிகள் கைப்பற்றி, அருகில் இருந்த அரசு அலுவகங்களின் அருகிலும் அவர்கள் சோதனையிட்டனர்.
இதனிடையே, பத்திர பதிவு செய்ய வந்த ஒருவர் வைத்திருந்த ₹1.30 லட்சத்தையும் அவர்கள் பறிமுதல் ஆவணங்கள் குறித்து விசாரணை நடத்தினர்.தொடர்ந்து 5.மணி நேரத்திற்கும் மேலாக லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனையில் ஈடுபட்டனர் விசாரணை முடிவில் கணக்கில் வராத பணம் பதிவேடுகள் தெரியும் வரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் இதனால் பொன்னேரி பகுதியில் பரப்பரப்பு ஏற்பட்டது.
No comments