டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு..... காலி பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு....
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் கடந்த ஜூன் மாதம் ஒன்பதாம் தேதி குரூப் 4 தேர்வை நடத்தியது. அதற்கான பணியிடங்கள் 6,244 ஆகும். குரூப் 4 தேர்வு மூலம் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், வன காவலர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. தமிழக முழுவதும் 15.8 லட்சம் பேர் குரூப் 4 தேர்வை எழுதினர். வருகிற அக்டோபர் மாதம் இந்த தேர்வு முடிவுகள் வெளியாகும் என தேர்வாணையம் அறிவித்தது.மேலும் கூடுதலாக 480 பணியிடங்கள் சேர்க்கப்பட்டு காலி பணியிடங்களின் எண்ணிக்கை 6,724 ஆக உயர்ந்தது. ஆனால் அது திருப்திகரமாக இல்லை எனவும் காலி பணியிடங்களை அதிகரிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர். அதன் அடிப்படையில் குரூப் 4 தேர்வு காலி பணியிடங்களை அதிகரிப்பதற்கான கணக்கெடுப்பு நடைபெற்று வருவதாகவும் அக்டோபர் மாதத்தின் முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் டிஎன்பிஎஸ்சி கூறியுள்ளது.
No comments