• Breaking News

    தூய்மை பணியாளர் வேலைக்கு விண்ணப்பித்த 40,000 பட்டதாரிகள்

     


    இன்றைய காலகட்டத்தில் வேலைவாய்ப்பின்மை பிரச்சனை அதிகரித்து வருகிறது. படித்த பட்டதாரிகளுக்கு வேலை கிடைக்காமல், கிடைக்கின்ற வேலையை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் தூய்மை பணியாளர் வேலைகளுக்கு ஆயிரக்கணக்கான பட்டதாரிகள் விண்ணப்பித்துள்ளனர். 

    அரியானாவில் மாநில அரசு அலுவலங்களில் இருக்கும் குப்பைகளை அகற்ற, தூய்மை பணியாளர் வேலைக்கு பட்டதாரிகள் உட்பட 1.2 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.அதில் 6000 பேர் முதுகலை பட்டதாரிகள், 40 ஆயிரம் பேர் இளங்கலை பட்டதாரிகள் மற்றும் 12 ஆம் வகுப்பு படித்தவர்கள் என பலர் விண்ணப்பித்துள்ளனர். 

    இந்த வேலைக்கு மாதம் 15 ஆயிரம் ரூபாய் சம்பளமாக வழங்கப்படுகிறது. இதற்கு பல பட்டதாரிகள் விண்ணப்பித்ததால் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அம்மாநிலத்தில் அதிகரிக்கும் வேலையின்மை காரணமாக, காங்கிரஸ் கட்சிகள் பாஜகவை விமர்சித்து வருகின்றது.

    No comments