• Breaking News

    திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் 4000 பேருக்கு மேல் அறுசுவை உணவு வழங்கி அசத்தல்


    தமிழக முதல்வரும் திராவிட முன்னேற்ற கழக கட்சியின் தலைவருமான மு க ஸ்டாலின் ஆணைப்படி திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் பொது உறுப்பினர்கள் கூட்டம் பொன்னேரி அடுத்த தச்சூர்கூட்டு சாலை பகுதியில் அமைந்துள்ள எல்.கே. எஸ் தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.

    இக்கூட்டத்திற்கு திருவள்ளூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளரும், கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினருமான டி.ஜெ.கோவிந்தராஜன் தலைமை வகித்தார், சோழவரம் வடக்கு ஒன்றிய செயலாளர் நான் செல்வசேகரன் அனைவரையும் வரவேற்றார், மாவட்ட பொறுப்பாளர்கள் மு.கதிரவன்,டாக்டர்.பரிமளம் விஸ்வநாதன்,ஜே.மூர்த்தி உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர் இதில் சிறப்பு அழைப்பாளர்களாக கழக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்பாரதி,சொத்து பாதுகாப்பு குழு துணை தலைவர்இ.ஏ.பி.சிவாஜி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு வருகின்ற உள்ளாட்சி மன்ற தேர்தலை குறித்து கட்சியின் தொண்டர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.

    மேலும் துணை முதல்வராக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களை திருவள்ளூர் வடக்கு மாவட்ட திமுக சார்பில் பரிந்துரை செய்து தீர்மான நிறைவேற்றப்பட்டது.இதில் மாவட்டத் துணைச் செயலாளர் கே வி ஜி உமா மகேஸ்வரி. மாநில கொள்கை பரப்பு துணைச் செயலாளர் வெ.அன்புவாணணன் பொதுக்குழு உறுப்பினர் பா.செ. குணசேகரன் ஒன்றிய செயலாளர்கள் மணிபாலன் கி.வே. ஆனந்தகுமார் ,எம், எஸ், கே, ரமேஷ் ராஜ் கா.சு, ஜெகதீசன் நா பரிமளம்., நகர செயலாளர்கள் ஜி. ரவிக்குமார் இரா ,அறிவழகன் ,பி ,முத்து க.சு ,தமிழ்உதயன், மாநில,மாவட்ட, ஒன்றிய கழக நிர்வாகிகள் செயற்குழு,பொதுக்குழு, உறுப்பினர்கள், பேரூர் கழக அணிகளின் தலைவர்கள்,அமைப்பாளர்கள்,துணை அமைப்பாளர்கள்,பேரூர் கழக நிர்வாகிகள், பேரூர் கழக வார்டு செயலாளர்கள் என திரளான கட்சியின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். மண்டபம் அருகே பிரம்மாண்டமான பந்தல் அமைத்து 4000. பேருக்கு மேல் அறுசுவை உணவு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது இறுதியாக வருகை தந்த அனைவருக்கும் சோழவரம் ஒன்றிய குழு தலைவர்.மு.ராசாத்தி செல்வ சேகரன் நன்றி தெரிவித்தார்.

    No comments