கும்டிப்பூண்டி: சிப்காட் தனியார் தொழிற்சாலை சிஎஸ்ஆர் மூலம் ரூ.25லட்சம் மதிப்பில் மூன்று அங்கன்வாடி மையம் திறப்பு
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியம் சிப்காட் தனியார் தொழிற்சாலை மூலம் சி எஸ் ஆர் நிதியின் மூலம் பில்லா குப்பம் கவரப்பேட்டை ஆத்துப்பக்கம் ஆகிய பகுதிகளில் சுமார் 25 லட்சம் மதிப்பில் 3 அங்கன்வாடி மையங்களை கும்மிடிப்பூண்டி காவல் துணை கண்காணிப்பாளர் அண்ணாதுரை கும்மிடிப்பூண்டி ஒன்றிய பெருந்தலைவர் கே எம் எஸ் சிவகுமார் திறந்து வைத்தனர்.
இதில் தனியார் கம்பெனி நிர்வாகிகள் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் ராஜேஸ்வரி குருவராஜ கண்டிகை ஊராட்சி துணைத் தலைவர் எஸ் வெங்கடேசன் மற்றும் பில்லாகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவழக்கறிஞர் சமூக ஆர்வலர் எஸ்.சுரேஷ் பாபு மற்றும் எஸ் ஹரி வர்மா எஸ் அசோக் வர்மா என் நவீன் குமார், எஸ் மகேந்திரன் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
No comments