திருவள்ளூர்: 25 ஆண்டு காலம் பணி செய்த 43 ஆசிரியர்களுக்கு விருதுகள்....
திருவள்ளூர் மாவட்டம்,மீஞ்சூரில் உள்ள விக்னேஷ்வரி மினி ஹாலில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மீஞ்சூர் வட்டார கிளை மகளிர் வலையமைப்பு சார்பில் ஆசிரியர் தின விழா நடைபெற்றது.மீஞ்சூர் வட்டார மகளிர் வலையமைப்பு தலைவர் பிரசன்னவதனா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் வட்டார செயலாளர் விஜயலட்சுமி வரவேற்றார்.குத்துவிளக்கு ஏற்றப்பட்டு, ஆசிரியர்களின் குழந்தைகள் பங்கேற்ற வரவேற்பு நடனம் மற்றும் சிலம்பாட்டம் முடிந்து கல்வி பணியில் 25 ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றிய நடுநிலைப்பள்ளி மற்றும் தொடக்கப்பள்ளிகளைச் சேர்ந்த 43 ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.2023-24 கல்வியாண்டில் பனிரெண்டாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று வெற்றி பெற்ற ஆசிரியர்களின் குழந்தைகளுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது.இதனை தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஓய்வு பிரிவு மாநில பொருளாளர் கே.ஆர்.ஜெகநாதன் வழங்கி இயக்க உரையாற்றினார்.இந்த நிகழ்ச்சியில் மகளிர் வலையமைப்பு வட்ட பொருளாளர் சோபா நன்றி கூறினார்.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி மாவட்ட நிர்வாகிகள் இளங்கோவன்,ராஜாஜி,சேகர்,கதிரவன்,ரஜினி பிரியதர்ஷினி,கோடீஸ்வரி,வளர்மதி வட்டார நிர்வாகிகள் மாசில்லா மணி,சந்திரசேகர்,ஆனந்த் சாந்தகுமார்,தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட,வட்ட நிர்வாகிகள், மகளிர் வலையமைப்பு நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
No comments