தாம்பரம் அருகே சிட்லபாக்கத்தில் 21,000 விநாயகர் சிலைகளுடன் கண்காட்சி
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு 11 நாட்கள் நடைபெறுகிறது.சென்னை குரோம்பேட்டை, ராதாநகரை சேர்ந்தவர் கட்டிட கலை நிபுணர் சீனிவாசன்.தீவிர விநாயகர் பக்தரான இவர் கடந்த 17 ஆண்டுகளாக ஆயிரகணக்கான விநாயகர் சிலைகளுடன் கண்காட்சி நடத்தி வருகிறார்.இந்நிலையில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, தாம்பரம் அடுத்த சிட்லப்பாக்கம், காந்தி தெரு, ஸ்ரீலட்சுமி ராம் கணேஷ் மகாலில் 21ஆயிரம் விநாயகர் சிலைகளுடன் கூடிய 18 ஆம் ஆண்டு விநாயகர் கண்காட்சி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தொடங்கியுள்ளது.
கண்காட்சியானது இன்று 7ந்தேதி முதல் துவங்கி செப்டம்பர் 17ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.கண்காட்சியில் பல்வேறு விநாயகர் சிலைகள் இடம் பெற்றுள்ளது.சிப்பிக்குள் முத்து போல பிள்ளையார் முத்துலிருந்து பிறந்து வருவது போல தத்ரூபமாக இந்த ஆண்டு விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளது
இருளிலும் மின்னும் ரேடியம் பிள்ளையார் திண்ணையில் படுத்து ஓய்வெடுக்கும் பிள்ளையார் சங்கு பிள்ளையார் என பல்வேறு பிள்ளையார்கள் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளது.மேலும், கண்காட்சியில் அரை இன்ச்சில் இருந்து 8 அடி உயரம் வரையிலான பல்வேறு விதமான விநாயகர் சிலைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இதில் தங்கம், வெள்ளி, செம்பு, பித்தளை, ஐம்பொன், இரும்பு, கண்ணாடி உள்ளிட்டவற்றால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் இடம் பெற்றுள்ளன. கண்காட்சியை காலை 9 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 7 மணி வரையிலும் பொதுமக்கள் பார்க்க இலவசமாக அனுமதிக்கப்பட்டுள்ளது.இந்த கண்காட்சியை அமைச்சர் தாமோ அன்பரசன் துவக்கி வைத்தார்.
No comments