தீப்பிடித்து எரிந்த காருக்குள் கட்டுகட்டாக கிடந்த 2000 ரூபாய் நோட்டுகள்

 


திருப்பத்தூரில் இருந்து அபி நரசிம்மன் என்பவர் சென்னை நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது வெலக்கல்நத்தம் தேசிய நெடுஞ்சாலை வைத்து காரின் முன் பகுதியில் இருந்து புகை வெளியேறியது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அபி நரசிம்மன் உடனடியாக காரை நிறுத்தி விட்டு கீழே இறங்கினார். பின்னர் கண்ணிமைக்கும் நேரத்தில் கார் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இது குறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காரில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர்.

அந்த காரில் கட்டு கட்டாக 2000 ரூபாய் நோட்டுகள் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து போலீசார் அபி நரசிம்மனிடம் விசாரணை நடத்திய போது தான் ஒரு சினிமா தயாரிப்பாளர் எனவும், படப்பிடிப்புக்காக போலி ரூபாய் நோட்டுகளை கொண்டு சென்றதாகவும் அபி நரசிம்மன் கூறியுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Post a Comment

0 Comments