பிரதமர் மோடியை செப்.20-ல் சந்திக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...?
பிரதமர் மோடியை தமிழக முதல்வர் ஸ்டாலின் வருகிற 20-ஆம் தேதி சந்திக்க உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. அதாவது மத்திய அரசின் சமக்ர சிக்ஷா அபியான் திட்ட நிதி மற்றும் மெட்ரோ ரயில்வே திட்டங்களுக்கான நிதியை விடுவிப்பது தொடர்பாக பிரதமர் மோடியை முதல்வர் சந்திக்க இருக்கிறார்.
இதற்காக வருகிற 20ஆம் தேதி நேரம் கேட்டிருந்த நிலையில் இதுவரை நேரம் ஒதுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் நேரம் முடிவு செய்யும்படி பட்சத்தில் தமிழகத்திற்கு விடுவிக்கப்பட வேண்டிய நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என முதல்வர் பிரதமரிடம் கோரிக்கை வைப்பார் என்று கூறப்படுகிறது.
No comments