• Breaking News

    திருமண ஆசை காட்டி உல்லாசம்..... ரூ.19 லட்சம் அபேஸ்..... கழட்டிவிட்ட வாலிபர்

     


    சென்னை பல்லாவரத்தில் வசிக்கும் திவ்யா(28) என்ற பெண், ஈ.சி.ஆரில்  உள்ள ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் திவ்யா கடந்த 2022-ம் ஆண்டு அப்பகுதியில் உள்ள  ஜிம்மில் சேர்ந்துள்ளார். இவருக்கும் அதே ஜிம்மில் உடற்பயிற்சி செய்து வந்த மணிபாலன் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. 

    அதன் பிறகு மணிபாலன், அந்த திவ்யாவிடம் தான் ஒரு  பெண்ணை காதலித்ததாகவும், அவள் விட்டு சென்றதாகவும், தற்போது அந்த பெண்ணை காதலிப்பதாக கூறினார்.அதன் பின்பு இவர்கள் 2 பேரும் இரண்டரை வருடம் காதலித்து வந்துள்ளனர். அப்போது மணிபாலன் அந்த திவ்யாவிடம் இருந்து 19 லட்சம் ரூபாய் பணத்தை வாங்கியுள்ளார். அதன் பின் இருவரும் உல்லாசமாக இருந்துள்ள நிலையில், அந்தப் திவ்யா கருவுற்றுள்ளார்.இப்பொழுது குழந்தை தேவையில்லை என்று கூறி அந்த குழந்தையை மணிபாலன் கலைத்துள்ளார். அதன் பிறகு இவர்கள் திருமணம் செய்து கொண்டத்தோடு, அந்த திவ்யா கருவுற்றதை மீண்டும்  மணிபாலன் கலைத்துள்ளார். சில நாட்கள் கழித்து திடீரென அவர், திவ்யாவிடம் உன்னை பிடிக்கவில்லை, நாம் இருவரும் வேறு ஜாதி.

    நான் என்னுடைய முன்னாள் காதலியை திருமணம் செய்து கொள்ளப் போகிறேன் என்று கூறி திவ்யாவின் தொடர்பை துண்டித்ததோடு செல்போன் நம்பரை பிளாக் செய்துள்ளார். இதனால் திவ்யா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனாலும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால் காவல் ஆய்வாளருக்கு 20,000 ரூபாய் பணம் கொடுத்துள்ளார். என்னுடன் வாழ மறுத்து வேறொரு பெண்ணை வருகிற 5-ம் தேதி திருமணம் செய்ய இருக்கிறார். அதை தடுத்து நிறுத்தி தன்னுடன் சேர்த்து வைக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட பெண் கோரிக்கை விடுத்துள்ளார்.

    No comments