கும்மிடிப்பூண்டியில் 154 விநாயகர் சிலைகள் கடலில் கரைப்பு
கும்மிடிப்பூண்டியில் விநாயகர் சதுர்த்திக்காக 187விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டு பொதுமக்கள் வழிபாடு நடத்தி வந்த நிலையில், கடந்த 2 நாட்களில் 55 சிலைகள் கடலில் கரைக்கப்பட்ட நிலையில், திங்களன்று ஒரே நாள் 99விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கப்பட்டது.விநாயகர் சதுர்த்தி விழாவிற்காக கும்மிடிப்பூண்டி முழுக்க 187சிலைகள் அமைக்கப்பட்டு இருந்தது. கடந்த சனிக்கிழமை இந்த சிலைகளுக்கு பொதுமக்கள் பூஜைகள் நடத்தி வழிபாடு, அன்னதானம் செய்த நிலையில், சனிக்கிழமை 32சிலைகள் கடலில் கரைக்கப்பட்டது. அதே போல ஞாயிற்றுக்கிழமை 23 சிலைகள் கரைக்கப்பட்டது.
தொடர்ந்து திங்களன்று கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் 16 விநாயகர் சிலைகள் உள்ளிட்ட கும்மிடிப்பூண்டி வட்டம் முழுக்க 99சிலைகள் கடலில் கரைக்கப்பட்டது.கும்மிடிப்பூண்டி ரெட்டம்பேடு சாலையில் உள்ள எம்.எஸ்.ஆர். கார்டன், ஸ்ரீவாரி பாபா நகர், குரு கிருபா நகர், என்.எம்.எஸ்.நகர், அருள் நகர் பகுதி மக்கள் இணைந்து விநாயகர் சதுர்த்தி ஒட்டி நர்த்தன விநாயகரை அமைத்து வழிபட்டனர். பின் 3நாள் பூஜைக்கு பிறகு, விநாயகர் சிலை டிராக்டரில் ஏற்றப்பட்டு பூ, பழங்கள், பிஸ்கட்டால் அலங்கரிக்கப்பட்டு, ஊர்வலமாக கும்மிடிப்பூண்டி ரெட்டம்பேடு சாலையில் இருந்து கும்மிடிப்பூண்டி பஜார் வழியை எளாவூர் ஏழுகிணறில் கடலுக்கு செல்லும் கால்வாயில் கரைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் தொழிலதிபர் முனிராஜ்., கும்மிடிப்பூண்டி பேரூராட்சி கவுன்சிலர்கள் கருணாகரன், எஸ்.டி.டி.ரவி, மாரிமுத்து, சங்கர், மதன்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
No comments