• Breaking News

    ராகுல் காந்தியின் நாக்கை அறுத்தால் ரூ‌.11 லட்சம் பரிசு..... சிவசேனா எம்எல்ஏ சர்ச்சை பேச்சு

     


    காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி சமீபத்தில் அமெரிக்கா சென்ற நிலையில் ஜார்ஜ் டவுன் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது அவர் இட ஒதுக்கீடு மற்றும் நாடாளுமன்ற தேர்தல் குறித்து பல்வேறு விஷயங்களை பேசிய நிலையில் தேச துரோக குற்றங்களை ராகுல் காந்தி செய்து வருவதாக பாஜக குற்றம் சாட்டியது.

    இந்நிலையில் ராகுல் காந்தி இந்தியாவில் அனைவருக்கும் சமமான வாய்ப்பு கிடைக்கும்போது இட ஒதுக்கீடை ரத்து செய்வது பற்றி காங்கிரஸ் யோசிக்கும் என்று கூறியிருந்த நிலையில் இதற்கு தற்போது சிவசேனா கட்சி எம்எல்ஏ சஞ்சய் கெய்குவாட் கண்டனம் தெரிவித்துள்ளார். இவர் ஏக்நாத் ஷிண்டே தரப்பை சேர்ந்தவர். அதாவது இட ஒதுக்கீடை ரத்து செய்வேன் என்று கூறிய ராகுல் காந்தியின் நாக்கை அறுக்க வேண்டும். அப்படி அறுப்பவருக்கு நான் 11 லட்ச ரூபாய் தருகிறேன் என்று கூறினார். மேலும் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அந்த எம்எல்ஏ மீது தற்போது காவல்துறையினர் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    No comments