• Breaking News

    ரூ.10 கோடி நிலத்தை அபகரிக்க உடந்தை..... பத்திரப்பதிவு டி.ஐ.ஜி ரவீந்திரநாத் கைது.....

     


    போலி ஆவணம் வாயிலாக, 10 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை அபகரிக்க முயன்ற கும்பலுக்கு உடந்தையாக இருந்த, பத்திரப்பதிவு துறை டி.ஐ.ஜி., ரவீந்திரநாத் கைது செய்யப்பட்டார்.பத்திரப்பதிவு துறையில், சேலம் சரக டி.ஐ.ஜி.,யாக இருப்பவர் ரவீந்திரநாத். அவர், சென்னையில் நிர்வாக பிரிவு மாவட்ட பதிவாளராக இருந்தபோது, தாம்பரம் வரதராஜபுரத்தை சேர்ந்த சையது அமீன் என்பவருக்கு சொந்தமான, 10 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை, போலி ஆவணம் வாயிலாக, ஒரு கும்பல் அபகரிக்க உடந்தையாக இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. 

    அந்த நிலத்தை, காந்தம்மாள் என்பவரின் பெயருக்கு, பத்திரப்பதிவு செய்து கொடுத்துள்ளார்.சி.பி.சி.ஐ.டி., போலீசார் நேற்று, சேலத்தில் இருந்து ரவீந்திரநாத்தை அழைத்து வந்து, சென்னையில் விசாரணை நடத்தி, கைது செய்தனர்.கோவையில், 300 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்தை அபகரிக்க முயன்ற வழக்கு தொடர்பாக, கோவையில் சார் பதிவாளராக இருந்த மணிமொழியான் மற்றும் உதவியாளர்கள் லதா, சபரீஷ் ஆகியோரை கைது செய்திருந்தனர்.

    அப்போது, மணிமொழியான் அளித்த வாக்குமூலத்தில், 'நான் தாம்பரத்தில் சார் பதிவாளராக இருந்தபோது, 300 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்திற்கு, அடமான பத்திர ஆவணத்தை நீக்கிவிட்டு, ஏற்கனவே கிரயம் செய்தது போல, போலி ஆவணங்களை சேர்த்தேன். அதை வில்லங்க சான்றிலும் திருத்தம் செய்தேன்.

    'இதற்கு, அப்போது சென்னையில் நிர்வாக மாவட்ட பதிவாளராக இருந்த ரவீந்தரநாத், எட்டு முறை வில்லங்க சான்றில் திருத்தம் செய்ய அனுமதி அளித்து, குற்றத்திற்கு உடந்தையாக இருந்தார்' என, தெரிவித்துள்ளார். இது தொடர்பாகவும் ரவீந்திரநாத்திடம் விசாரணை செய்யப்பட்டுள்ளது.

    No comments