• Breaking News

    திருவள்ளூர்: அதிமுக ஆட்சியில் 10 ஆண்டு நிறுத்தப்பட்ட போக்குவரத்து மீண்டும் தொடக்கி வைத்தார் டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ


    திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி முதல் கும்மிடிப்பூண்டி வழியாக அப்பய்யாபளையம் வரை மீண்டும் பேருந்து சேவை இயக்கம். கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் பத்தாண்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த T42 A வழித்தடத்தில் மீண்டும் பேருந்து சேவையை திருவள்ளூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ வுமான டி ஜெ கோவிந்தராஜன் முயற்சியால் தொடங்கப்பட்டது.

    ஆரம்பத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் எம்எல்ஏ கொடியை சேர்த்து துவக்கி வைத்தார் பொன்னேரி, கவரப்பேட்டை, கும்மிடிப்பூண்டி ஆரம்பாக்கம்., தோக்கமூர், நாயுடுகுப்பம். எகுமதுரை , அப்பய்யாபளையம்  வரை இயக்கப்பட்ட இந்த பேருந்து சேவையை வழிநடக கிராம மக்கள் மலர் தூவி வரவேற்று சட்டமன்ற உறுப்பினருக்கு நன்றி தெரிவித்தனர்.

     

    இதில் ஒன்றிய செயலாளர் மணிபாலன்  தோக்கமூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மணி எகுமதுரையில் ஒன்றிய துணை செயலாளர் டி.சி.மஸ்தான் ஆரம்பாக்கம் ஆறுமுகம் மாவட்ட கவுன்சிலர் ராமஜெயம் பொருளாளர்ரமேஷ் ஆரணி பேரூர் கழக செயலாளர் முத்து உள்ளிட்டோர் பேருந்து சேவை தொடங்கி வைத்த முதல் வழிநடக உற்சாக வரவேற்பு அளித்தனர் இதில் கழக நிர்வாகிகள் போக்குவரத்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

    No comments