இன்ஸ்டாகிராமில் தையல் குறித்து விளக்கும் பெண் பயிற்சியாளர்களை டெய்லர் அக்கா எனவும், யோகா குறித்து பயிற்சி அளிக்கும் பெண் பயிற்சியாளர்களை யோகா அக்கா எனவும், உடற்பயிற்சி குறித்து சொல்லித் தரும் பெண் பயிற்சியாளர்களை ஜிம் அக்கா எனவும் பெயரிட்டு அவர்களை இணையத்தில் டிரெண்ட் செய்வது தற்போது வழக்கமாகி வருகிறது.
வீடியோ பார்க்க க்ளிக் செய்யவும்
அந்த வகையில், பக்தி பாடல்களை பாடி பிரபலமானவர்தான் ஸ்ரீநாவல கிஷோரி. அவரது வீடியோக்களை பலவிதமாக எடிட் செய்து பலர் இணையத்தில் ஷேர் செய்வது வழக்கம். அந்த வகையில், நபர் ஒருவர் Dettol சோப்பில் தனது கலை நயத்தை காட்டி அவரது முகத்தை அட்சிபிசராமல் அதில் கொண்டு வந்துள்ளார். அதை வீடியோவாக பதிவு செய்து இணையத்திலும் பதிவிட்டுள்ளார்.
அது வைரலாகி சம்பந்தப்பட்ட ஸ்ரீநாவல் கிசோரி அதற்கு நன்றி தெரிவித்து கமெண்ட் செய்தும் உள்ளார். அந்த வீடியோவிற்கு தற்போது வரை 10 லட்சத்திற்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments