என்னை பற்றி பேசுவதற்கு தற்குறி எடப்பாடி பழனிச்சாமிக்கு எந்த தகுதியும் கிடையாது - அண்ணாமலை
தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அண்ணாமலை உழைக்காமலேயே பதவிக்கு வந்தவர் என்று விமர்சித்திருந்தார். இதற்கு தற்போது அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து அண்ணாமலை கூறியதாவது, நான் உழைக்காமல் பதவிக்கு வந்துள்ளேன் என்றும் மைக்கை பார்த்தாலே பொய் பேசுவேன் என்றும் கூறியுள்ளார். அவர் கையை காலை பிடித்து வழக்கை முடித்த பிறகு பஞ்சாயத்து தேர்தலில் நின்று தோல்வி அடைந்தவர். தவழ்ந்து தவழ்ந்து காலில் விழுந்து பதவியைப் பிடித்த எடப்பாடி பழனிச்சாமி ஒரு மானமுள்ள விவசாயி மகன் பற்றி பேசுகிறார்.
ஒரு பைசா கூட லஞ்சம் வாங்காமல் நேர்மையாக உழைத்த இந்த அண்ணாமலையை பற்றி பேசுவதற்கு தற்குறி எடப்பாடி பழனிச்சாமிக்கு எந்தவித தகுதியும் கிடையாது. நான் ஒன்னும் எடப்பாடி பழனிச்சாமியை போன்று மானம் கெட்டு காலில் விழுந்து பதவி வாங்கவில்லை. தமிழ்நாட்டில் மிகப்பெரிய டெண்டர் கட்சியாகவும் கூவத்தூரில் ஏலம் விட்டு எம்எல்ஏக்களுக்கு சம்பளம் கொடுத்து ஆட்சியில் இருந்த எடப்பாடி பழனிச்சாமிக்கு என்னை பற்றி பேச என்ன தகுதி உள்ளது என்று கூறியுள்ளார். மேலும் எடப்பாடி பழனிச்சாமி பற்றி அண்ணாமலை இப்படி பேசியது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
No comments