கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் தனியார் இரும்பு உருக்காலையின் விரிவாக்கம் குறித்து பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது
கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் விக்கி இன்டஸ்ட்ரீஸ் என்கிற தனியார் நிறுவனம் செயல்பட்டு வந்து உற்பத்தி கடந்த சில ஆண்டுளாக நிறுத்தப்பட்டு இருந்தது. இந்த நிலையில் தொழிற்சாலையின் விரிவாக்க பணிக்காக மக்கள் கருத்து கேட்பு கூட்டம் கும்மிடிப்பூண்டியில் தனியார் மண்டபத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வில் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் லிவிங்ஸ்டன் வரவேற்றார். தொடர்ந்து தொழிற்சாலை நிர்வாகம் சார்பில் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு குறித்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இதில் தொழிற்சாலையில் இருந்த காற்றின் கார்பன் அளவு வெளியேறும் அளவை தடுக்க 50லட்சம் மதிப்பீட்டில் நவீன ரக கருவி பொருத்தப்பட்டுள்ளது என்றும், தொழிற்சாலை அமைந்தால் 700பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் எனவும், 25லட்சம் ரூபாய் மதிப்பில் தொழிற்சாலை சுற்றுபுற கிராமங்களில் சமூக பணிகள் நடைபெறும் என தெரிவித்தனர்.
நிகழ்வில் பங்கேற்ற தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில நிர்வாகி துளசிநாராயணன், கும்மடிப்பூண்டி சிப்காட்டில் ஏற்கெனவே காற்றின் மாசு அபாயகரமான நிலையில் உள்ளதால், புதிய தொழிற்சாலையால் சுற்றுச்சூழல் மேலும் கெடும் என்றார்,
கும்மிடிப்பூண்டி பேரூராட்சி துணை தலைவர் கேசவன் பேசுகையில் கும்மிடிப்பூண்டியில் உள்ள தாமரை ஏரி தொழிற்சாலைகளின் கழிவுகளால் மாசடைந்துள்ள நிலையில், மாசுகட்டுப்பாட்டு வாரிய விதிகளுக்கு உட்பட்டு தொழிற்சாலை இயங்கவும், தொழிற்சாலை சார்பில் கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் சமூக திட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
அவ்வாறே எஸ்.ஆர்.கண்டிகை ஊராட்சி மன்ற தலைவர் சி.எம்.ஆர்.ரேணுகா முரளி பேசும் போது உள்ளூர் மக்களுக்கு மட்டும் வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என்றார். மேலும் கூட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் ஜெயச்சந்திரன். மெய்யழகன், பேரூராட்சி கவுன்சிலர்கள் காளிதாஸ், நஸ்ரத் இஸ்மாயில் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தொடர்ந்து பேசிய மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார், தொழிற்சாலை விரிவாக்கம் குறித்து பொதுமக்களின் ஆதரவு, எதிர்ப்பு குறித்து அனைத்து தகவல்களும் பசுமை தீர்ப்பாயத்திற்கு அனுப்பப்படும் என்றார்.
No comments