எடப்பாடி காவல் நிலையம் மீது மர்ம நபர் பெட்ரோல் குண்டுவீச்சு

 


சேலம் மாவட்டம் எடப்பாடி போலீஸ் ஸ்டேஷன் மீது இன்று அதிகாலையில் மர்மநபர் பெட்ரோல் வெடிகுண்டுவை வீசிவிட்டு தப்பியோடினர். பணியில் இருந்து போலீசார் சத்தம் கேட்டு வௌியில் ஓடி வந்தனர். அதற்குள் குண்டு வீசிய மர்மநபர் தப்பி ஓடிவிட்டார்.

சம்பவ இடத்தில், தடயவியல் நிபுணர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Post a Comment

0 Comments