• Breaking News

    அந்தியூர் போக்குவரத்து காவல் நிலையம் சார்பில் காவல் ஆய்வாளர் கஸ்தூரி சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்த துண்டு பிரசுரங்களை வழங்கினார்


    ஈரோடு மாவட்டம் ,  அந்தியூர் போக்குவரத்து காவல் நிலையம் சார்பில்  காவல் ஆய்வாளர் கஸ்தூரி ,  சாலை பாதுகாப்பு மற்றும்  விபத்துகளை தடுக்கும்  விதமாகவும்  ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி பாறையூர், அந்தியூரில்  பள்ளியின்  தலைமை ஆசிரியர்  சகுந்தலா , ஆசிரியர்   ராஜேஷ் வரி ஆகியோர் முன்னிலையில் மாணவர்களுக்கு பதினெட்டு வயது நிறைவடையாமல்   இருசக்கர , நான்கு சக்கர வாகனம்  ஓட்டுதல் கூடாது. பெற்றோர்கள் இரு சக்கர வாகனங்களில் தலைகவசம் அணிந்து செல்ல அறிவுறுத்த வேண்டும்.

     இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் செல்லக்கூடாது. காப்பீடு இல்லாமல் வாகனம் ஓட்டுதல் கூடாது. பேருந்துகளில் படியில் நின்று பயணம் செய்யகூடாது. சாலையை கடக்கும் போது சிக்னல் விளக்கை பார்த்து கவனமாக செல்லவேண்டும். அடையாளம் தெரியாத நபர்கள் உடன் பயணம் செய்யகூடாது. சாலையில் கைப் பேசி தவறான முறையில் பயன்படுத்த கூடாது. இடது  புறம் ஓரமாக செல்ல வேண்டும். கனரக வாகனங்களில் மேலே அமர்ந்து பயணம் செய்யகூடாது. 

    தடை  செய்யப்பட்ட சைலன்சர் பைக், அதிக  சத்தம் எழுப்புவது, ஆபத்தான நிலையில் வேகமாக வாகனத்தை ஓட்டி சாலையில்  செல்பவர்களை அச்சம் ஏற்படுத்துவது, அவ்வாறு  செல்பவர்கள் உடன் பயணம் செய்வது  கூடாது என அறிவுரை வழங்கி துண்டு பிரசுரங்கள் கொடுக்க ப்பட்டது. மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.

    No comments