• Breaking News

    இண்டியானோ ஜோன்ஸ் பயன்படுத்திய தொப்பி பல கோடிக்கு ஏலம்

     

    ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இயக்கத்தில் கடந்த 1984-ம் ஆண்டு வெளியான படம் 'இண்டியானா ஜோன்ஸ் அண்ட் தி டெம்பிள் ஆப் டூம்'. இதில், இண்டியானோ ஜோன்ஸ் கதாபாத்திரத்தில் ஹாரிசன் போர்டு நடித்தார். மேலும், கேட் கேப்ஷா, கே ஹுய் குவான், அம்ரிஷ் பூரி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.இந்நிலையில், இப்படத்தில் இண்டியானோ ஜோன்ஸ் பயன்படுத்திய தொப்பி பல கோடிக்கு ஏலம் போயுள்ளது.

    சமீபத்தில், லாஸ் ஏஞ்சல்சில் நடந்த ஏலத்தில் 'இண்டியானா ஜோன்ஸ் அண்ட் தி டெம்பிள் ஆப் டூம்' திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்ட தொப்பி, சுமார் ரூ. 5.28 கோடிக்கு ஏலம் போயுள்ளது.

    பறக்கும் விமானத்தில் இருந்து இண்டியானா ஜோன்ஸ் கீழே குதிக்கும்போது இந்த தொப்பி பயன்படுத்தப்பட்டது. ஜோன்ஸாக நடித்த ஹாரிசன் போர்டின் ஸ்டண்ட் டூப், டீன் பெராதினி மறைந்ததைத் தொடர்ந்து அவரிடம் இருந்த இந்த தொப்பி ஏலத்தில் விடப்பட்டது.

    No comments