• Breaking News

    சினிமா நடிகர்கள் பாலியல் நடிகர்களாக மாறுவதால் மலையாளத் திரையுலகம் அதிர்ச்சி......

     


    மலையாள சினிமாவில் ஹேமா கமிட்டி அறிக்கை வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் அடுத்தடுத்து நடிகர்கள் மீது பாலியல் புகார்கள் எழுந்து வருகிறது. குறிப்பாக நடிகர் சித்திக், இயக்குனர் ரஞ்சித் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் விரைவில் அவர்கள் கைதாக வாய்ப்பு உள்ளது. இதைத்தொடர்ந்து தமிழ் சினிமாவில் வசூல்ராஜா எம்பிபிஎஸ் போன்ற படங்களில் நடித்துள்ள ஜெயசூர்யா மீது தற்போது திருவனந்தபுரம் கன்டோன்மென்ட் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    இவர் மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்கிறார். மேலும் இவர் மீது ஜாமினில் வெளியே வர முடியாத பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மலையாளத் திரையுலகில் அடுத்தடுத்து பாலியல் புகார்கள் வெளியாகி நடிகர்கள் பலர் சிக்குவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    No comments