வாணியம்பாடி பகுதியில் ஆட்டோ ஓட்டுனர் சுபாஷ் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு தனது மனைவியின் தாலியை அடகு வைத்து பிரிட்ஜ் வாங்கியுள்ளார். அவர் அந்த பிரிட்ஜை வாங்கி ஒரு வருடமே ஆன நிலையில் 4 முறைக்கு மேல் சர்வீஸ் செய்துள்ளார். இருப்பினும் அது சரிவர இயங்கவில்லை. இதனால் அவர் பிரிட்ஜை வாங்கிய ஷோரூமிற்கு எடுத்து சென்று பெட்ரோல் ஊற்றிக் கொழுத்த முயன்றுள்ளார்.
அதாவது திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சி எல் சாலையில் இயங்கி வரும் பிரபல தனியார் ஷோரூமில் இவர் இந்த பிரிட்ஜை கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு 2 வருட வாரண்டியுடன் வாங்கினார். வாங்கிய நாளிலிருந்து அடிக்கடி பழுது ஏற்பட்டு சர்வீஸ் சென்டர் மூலம் சரி செய்து வந்திருக்கிறார். அதோடு நான்கு முறை சர்வீஸ் செய்தும் சரி ஆகாததால் மன உளைச்சலுக்கு ஆளான சுபாஷ் தனது பிரிட்ஜை ஆட்டோவில் ஏற்றி ஷோருமிற்கு கொண்டு வந்தார்.
அங்கு ஊழியர்களிடம் வேறொரு பிரிட்ஜை மாற்றிக் கொடுக்குமாறு கேட்டுள்ளார். ஆனால் ஊழியர்கள் அதற்கு மறுப்பு தெரிவித்தனர். இதனால் ஆத்திரமடைந்த சுபாஷ் ஷோரூம் வாசலில் வைத்து பெட்ரோல் ஊற்றி கொழுத்த முயன்றார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் அவரை சமாதானப்படுத்தி பிரிட்ஜை சரி செய்து தருகிறோம் என்று கூறி அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
0 Comments