• Breaking News

    பவானி குறுமைய விளையாட்டு போட்டிகளை அந்தியூர் எம்எல்ஏ வெங்கடாசலம் துவக்கி வைத்தார்


    ஈரோடு மாவட்டம் , தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை சார்பில்பவானி குறுமைய விளையாட்டு போட்டிகள் அந்தியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் அம்மாபேட்டை  டேலண்ட் மெட்ரிக்குலேசன் பள்ளி சார்பில் நடைபெற்றது.

    இங்கு நடைபெற்ற போட்டிகளை அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலம்  துவக்கி வைத்தார்.மேலும் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் அந்தியூர் பேரூராட்சி மன்ற தலைவர்  எம்.பாண்டியம்மாள் ,பேரூர் செயலாளர் எஸ் கே.காளிதாஸ் ,பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் ஏ.சி.பழனிச்சாமி மற்றும் ஆசிரியர்,  ஆசிரியைகள் பலர் கலந்து கொண்டனர். மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி

    No comments