திருச்சி எஸ்பி மீதான அவதூறுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை - சீமான்
திருச்சி எஸ்பி வருண் குமார் மீது அவதூறு புகார்கள் தொடர்பாக பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. நாம் தமிழர் கட்சியின் 22 பேர் மீது அவதூறு பரப்பியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கட்சியின் தலைவர் சீமான் உள்ளிட்டோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக, விக்கிரவாண்டி இடைத்தேர்தலின் போது, நாம் தமிழர் கட்சியின் சாட்டை துரை முருகன் கைது செய்யப்பட்டார். இதற்கு வருண் குமார் காரணம் என சீமான் குற்றம்சாட்டினார். அதனைத் தொடர்ந்து சீமான் காவல்துறையினரை கடுமையாக விமர்சித்தார். இதற்கு பதிலளிக்கும் விதமாக வருண் குமார் சீமானின் பேச்சின் வீடியோவை வெளியிட்டார்.
இதையடுத்து, வருண் குமார் மீது அவதூறு பரப்பிய 22 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், சீமான், சாட்டை துரை முருகன், இடும்பாவளம் கார்த்திக் உள்ளிட்டோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வருண் குமாரின் மனைவி மீதும் அவதூறு பரப்பப்பட்டதால் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், வருண் குமார் மீதான அவதூறு புகார்களுடன் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என்றும், தன்னை, தனது குடும்பத்தினரை, கட்சி பெண்களை தொடர்ந்து அவதூறு செய்து வருவதாகவும் சீமான் குற்றம்சாட்டியுள்ளார்.
No comments