• Breaking News

    நெல்லை மாநகர பஸ்களில் சாதிய பாடல்களை ஒளிபரப்ப கூடாது..... காவல்துறை எச்சரிக்கை

     


    நெல்லையில் தனியார் மற்றும் அரசு பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்களுடன் காவல்துறையினர் ஆலோசனைக் கூட்டம் நடத்தினர். அப்போது, திருநெல்வேலி மாநகர பஸ்களில் சாதி ரீதியான பாடல்களை ஒலிபரப்பக் கூடாது என காவல்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

    நெல்லையில் கடந்த சில நாட்களாக பள்ளி மாணவர்களிடையே சாதி ரீதியான மோதல்கள் நடைபெற்று வரும் நிலையில், சாதிய மோதல்களை தடுக்கும் நோக்கத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மீறி சாதி ரீதியான பாடல்களை ஒலிபரப்பு செய்தால் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் மீது வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

    No comments