• Breaking News

    கும்மிடிப்பூண்டியில் சுதந்திர தின கோப்பைக்கான கராத்தே போட்டி நடைபெற்றது..... வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகளை டி.ஜெகோவிந்தராஜ் எம்எல்ஏ வழங்கினார்


    கும்மிடிப்பூண்டியில் செயல்படும் பூடோ சேம்பியன்ஸ் மார்ஷியல் ஆர்ட்ஸ் அமைப்பின் சார்பில் கும்மிடிப்பூண்டியில் சுதந்திர தின கோப்பைக்கான சர்வதேச கராத்தே போட்டி நடைபெற்றது.

    இந்த போட்டிகளுக்கு திமுக பொதுக்குழு உறுப்பினரும் பூடோ சாம்பியன்ஸ் மார்ஷியல் ஆர்ட்ஸ் அமைப்பின் தலைவர் பா.செ.குணசேகரன் தலைமை தாங்கினார்.இந்த போட்டிகளை திரைப்பட நடிகர் பெசன்ட் நகர் ரவி துவக்கி வைத்தார். தொடர்ந்து ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியாக பல்வேறு எடைப்பிரிவுகளில் கராத்தே போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டிகளில் பல்வேறு பகுதிகளில் இருந்து 500க்கும் மேற்பட்ட கராத்தே மாணவர்கள் பங்கேற்று போட்டியிட்டனர்.

    இந்த போட்டிகளுக்கு விசிக மாவட்ட செயலாளர் நீலமேகம், புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சி தலைவர் டாக்டர் அஷ்வினி சுகுமாறன் முன்னிலை வகித்தனர்.இதனை தொடர்ந்து பல்வேறு சுற்றுகளாக போட்டிகள் நடத்தப்பட்டு, பின் அரையிறுதி,  இறுதி போட்டிகள் நடத்தப்பட்டது.

    பின் போட்டிகளில் வென்றவர்களுக்கு நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பை, பரிசுத்தொகை  வழங்கி வாழ்த்தினார். மேலும் நிகழ்வில் போட்டியின் நடுவர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் தொழிலதிபர் கள் அனைவருக்கும்.போட்டி அமைப்பாளர்களால்  கௌரிக்கப்பட்டனர்.

    இந்தப் போட்டிகளுக்கான ஏற்பாடுகளை பூடோ சாம்பியன்ஸ்  மார்சியல் ஆர்ட்ஸ் அசோசியேஷன் அமைப்பின் நிறுவன தலைவர் சென்சாய் டாக்டர் பி.லோகேஷ்,இந்திம தலைமை கராத்தே  தற்காப்பு கலை இயக்குனர் கியோஷி பி.வில்சன் ராபர்ட் மில்லர் முன்னின்று சிறப்பாக நடத்தினர்.

    No comments