• Breaking News

    கோபிசெட்டிபாளையம் பழனியம்மாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழாவில் முன்னாள் அமைச்சரும் , கோபி எம்எல்ஏ கே.ஏ.செங்கோட்டையன் மிதிவண்டிகள் வழங்கினார்


    ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் பழனியம்மாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழாவில் முன்னாள் அமைச்சரும், கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற உறுப்பினர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு  140 மாணவிகளுக்கு மிதிவண்டிகள் வழங்கி சிறப்புரையாற்றினார்.

      மேலும் இந்நிகழ்ச்சியில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சத்தியபாமா, கோபிசெட்டிபாளையம் நகர அஇஅதிமுக செயலாளர் பிரினியோ கணேஷ், கோபிசெட்டிபாளையம் ஊராட்சி ஒன்றிய குழு பெருந்தலைவர் மெளதீஸ்வரன், கோபிசெட்டிபாளையம் ஒன்றிய செயலாளர்கள் குறிஞ்சி நாதன், வேலுமணி, கோபி நகராட்சி அஇஅதிமுக வார்டு உறுப்பினர்கள் மற்றும் பள்ளியின் தாளாளர், தலைமை ஆசிரியர் , அஇஅதிமுக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி - 9965162471 , 6382211592 .  ( செய்திகள் மற்றும் விளம்பரத்திற்கு அழைக்கவும் )

    No comments