• Breaking News

    குரங்கு அம்மை.... வெளிநாட்டு பயணிகளுக்கு கட்டாய பரிசோதனை

     

    தமிழகத்தில் இதுவரை யாருக்கும் குரங்கு அம்மை நோய் கண்டறியப்படவில்லை. புதிதாக கண்டறியப்பட்டால், உடனடியாக தனிமைப்படுத்தி, கொரோனா காலத்தில் கடைபிடிக்கப்பட்ட நடைமுறை மேற்கொள்ளப்படும்,'' என, அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.வெளிநாடுகளில் இருந்து வரும் பயணியருக்கு, சென்னை விமான நிலையத்தில், குரங்கு அம்மை நோய் பரிசோதனை செய்யப்படுகிறது. இதுகுறித்து, நேற்று அமைச்சர் சுப்பிரமணியன் ஆய்வு செய்தார்.

    வெளிநாடுகளில் இருந்து சென்னை வரும் விமான பயணியரை பரிசோதிக்க, 'மாஸ் பீவர் ஸ்கிரீனிங்' கருவி நிறுவப்பட்டுள்ளது. பயணியர் யாருக்காவது காய்ச்சல் மற்றும் தொற்று நோய் அறிகுறி இருந்தால், இந்த கருவியில் சிவப்பு விளக்கு எரியும்; ஒரு எச்சரிக்கை அலாரமும் ஒலிக்கும்.

    அறிகுறிகள் யாருக்கும் இல்லை எனில், பச்சை விளக்கு எரியும். சிவப்பு விளக்கு எரிந்தால், உடனடியாக மருத்துவக் குழுவினர் அப்பயணியை தனிமைப்படுத்தி, முதலுதவி சிகிச்சை அளித்து பரிசோதிப்பர். தேவைப்பட்டால் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்கப்படும்.சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை, கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, திருச்சி அரசு மருத்துவமனை, மதுரை அரசு மருத்துவமனை ஆகிய நான்கில்,10 படுக்கைகளோடு சிறப்பு வார்டுகள், நேற்று முதல் செயல்பாட்டுக்கு வந்துள் ளன.தமிழகத்தில் இதுவரை யாருக்கும் குரங்கு அம்மை நோய் கண்டறியப்படவில்லை. புதிதாக கண்டறியப்பட்டால், உடனடியாக தனிமைப்படுத்தி, கொரோனா காலத்தில் கடைபிடிக்கப்பட்ட நடைமுறை மேற்கொள்ளப்படும். அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களும் பரிசோதிக்கப்படுவர்.குரங்கு அம்மை நோயால், காங்கோ நாட்டில் இதுவரை 1,754 பேர்; அமெரிக்காவில் 1,399; சீனா 333; ஸ்பெயின் 332; தாய்லாந்து 120; பாகிஸ்தானில் ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    உலகம் முழுதிலும் குரங்கு அம்மை நோய் வேகமாகப் பரவி வருவதால், தமிழகத்திற்கு விமானங்களில் வரும் பயணியரை தீவிரமாக கண்காணித்து பரிசோதிக்கும்படி முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். இதையடுத்து, அவர்களை கண்காணிக்கும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

    கொரோனா நோய்த்தொற்று அளவுக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு இருக்காது என கருதுகிறோம். மத்திய அரசும் பல்வேறு முன்னெச்சரிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.ஆப்பிரிக்க நாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து வரும் பயணியர் பலர், இணைப்பு விமானங்களில் வருகின்றனர். சென்னை விமான நிலையத்தில், அனைத்து சர்வதேச விமான பயணியரையும் பரிசோதிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அனைத்து பயணியரும், 'மாஸ் பீவர் ஸ்கீரினிங் சிஸ்டம்' வழியாக செல்வதற்கு வழிவகை செய்யப்பட்டுஉள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

    No comments