என்ன ஆச்சு.... காலில் கட்டுடன் குஷ்பு வெளியிட்ட போட்டோ.....
பிரபல நடிகையான குஷ்பூ வருஷம் 16 திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் கதாநாயகியாக தனது பயணத்தை ஆரம்பித்தார். முன்னதாக குழந்தை நட்சத்திரமாக ஒரு சில படங்களில் நடித்துள்ளார். குஷ்பூ முன்னணி நடிகர்களான விஜயகாந்த், ரஜினிகாந்த், கமல்ஹாசன், சத்யராஜ் பிரபு உள்ளிட்டோருடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். இயக்குனரான சுந்தர்.சியை குஷ்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இந்த தம்பதியினர் இரண்டு மகள்கள் இருக்கின்றனர். குஷ்பூ பா.ஜ.க-வில் இணைந்தார். பின்னர் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.சோசியல் மீடியாவில் குஷ்பு எப்போதும் ஆக்டிவாக இருப்பார். அவர் சினிமா மற்றும் அரசியல் தொடர்பான கருத்துக்களை பகிர்ந்து வந்தார். மேலும் தனது வாழ்க்கை பற்றியும் சோசியல் மீடியாவில் பதிவிட்டு வந்தார்.
இந்த நிலையில் குஷ்பூ தனது காலில் கிரிப் பேண்ட் கட்டுடன் இருக்கும் போட்டோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் நானும் எனது பெஸ்டியும் மிகச்சிறந்த காம்போ என கேப்ஷனில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் உங்களுக்கு என்ன ஆச்சு என குறிப்பிடம் பதற்றத்துடன் கேட்டு வருகின்றனர்.மேலும் கூடிய விரைவில் குணமாக பிரார்த்திக்கிறோம் எனவும் ஏராளமான கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது.
No comments