• Breaking News

    பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட பெண் டாக்டரின் பிரேத பரிசோதனையில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது



     கடந்த 9ம் தேதி மேற்கு வங்க மாநிலம் தலைநகர் கோல்கட்டாவில் உள்ள ஆர்.ஜி., கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியில் இருந்த இளம்பெண் டாக்டர் உடலில் ரத்த காயங்களுடன் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். அவரை பாலியல் பாலத்காரம் செய்து, கால் எலும்பை முறித்து, மிகவும் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டதாக சொல்லப்பட்டது.

    நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். இளம்பெண் டாக்டர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்து, தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என்றும், மருத்துவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி டாக்டர்கள் சங்கத்தினர் தொடர்ந்து நாடு தழுவிய போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த நிலையில், இளம்பெண் டாக்டரின் பிரேத பரிசோதனை வெளியாகியுள்ளது. அதில், தலை, கழுத்து, முகம், கைகள் மற்றும் பிறப்புறுப்பு என 14 இடங்களில் காயங்கள் இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது. மேலும், கழுத்தை நெரித்து கொலை செய்து இருப்பதாகவும், கொடூரமான முறையில் வன்புணர்வு செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இளம்பெண் டாக்டரின் நுரையீரலில் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளதாகவும், உடலின் பல இடங்களில் ரத்தம் உறைந்துள்ளதாகவும் பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.இதனிடையே, இளம்பெண் டாக்டர் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டுள்ளாரா? என்ற கோணத்தில் இந்த வழக்கை சி.பி.ஐ., விசாரித்து வருகிறது.

    No comments