• Breaking News

    அறந்தாங்கியில் கராத்தே பிரதர்ஸ் சமூக நல அறக்கட்டளையின் கலைத்திறன் போட்டிகள் நடைபெற்றது


    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் கராத்தே பிரதர்ஸ் சமூக நல அறக்கட்டளை யின் 25வது வெள்ளி விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, அனைத்துப் பள்ளி மாணவ, மாணவியருக்கான கலைத்திறன் போட்டிகளும், போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழாவும் அறந்தாங்கி அரசு மாதிரி மேனிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. 

    விழாவிற்கு தலைவர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். செயலாளர் ராஜா, பொருளாளர் விஸ்வமூர்த்தி, இணைச் செயலாளர் கார்த்திகேயன், துணைச் செயலாளர் காசிநாதன், ஒருங்கிணைப்பாளர் சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி, ஓவியப்போட்டி,வெட்டு ஒட்டு போட்டி, சதுரங்கப்போட்டி, வினாடி வினா போட்டி, குழு விவாதம் உள்ளிட்ட போட்டிகள் பல்வேறு பிரிவுகளில் நடைபெற்றன.

    போட்டிகளை அறந்தாங்கி நகர்மன்றத் தலைவர் ஆனந்த் தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். தொழிலதிபர்  மலைக்கண்ணன் வாழ்த்திப் பேசினார்.போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களும் , நினைவுப் பரிசுகளும் வழங்கப்பெற்றன.வினாடி வினா போட்டியில் முதற்பரிசு பெற்ற மாணவருக்கு ரூபாய் 1025 ரொக்கப்பரிசும்,பவர்பாய்ண்ட் போட்டியில் முதற்பரிசு  பெற்ற மாணவருக்கு ரூபாய் 1025 ரொக்கப்பரிசும் வழங்கப் பெற்றன.

    போட்டிகளில் பங்கேற்ற 1000 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் , ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் என அனைவருக்கும் மதிய உணவும் வழங்கப்பெற்றன. முன்னதாக செயலாளர் ராஜா அனைவரையும் வரவேற்றார். நிறைவாக மக்கள் தொடர்பு அலுவலர் பழனித்துரை நன்றி கூறினார்.

    No comments