கரூர் மாவட்டம் க.பரமத்தி சுற்றுவட்டார பகுதியில் 100க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் செயல்பட்டு வரும் நிலையில், தாழையூத்துப்பட்டி பகுதியில் இயங்கி வரும் தனியார் கல்குவாரியில் 100 அடி ஆழக்குடியில் 3 அடி அளவில் தண்ணீர் தேங்கியுள்ளது.
கல்குவாரி குழியில் இருந்து தண்ணீர் எடுத்து கொண்டு திரும்பியபோது எதிர்பாராத விதமாக 100 அடி உயரத்தில் இருந்து டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் ஓட்டுநர் சுதாகர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், கல்குவாரி உரிமையாளரான அமமுக மாவட்ட செயலாளர் தங்கவேல் உட்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
0 Comments