தீபாவளி பட்டாசு விற்பனை செய்ய விண்ணப்பிக்க தேதி அறிவிப்பு
தீபாவளி பண்டிகை என்றாலே அனைவருடைய நினைவுக்கும் வருவது பட்டாசு தான். இந்த வருடம் தீபாவளி பண்டிகை நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் மதுரை மாநகர பகுதிகளில் தீபாவளி பட்டாசுகள் விற்பனை செய்வதற்கான தற்காலிக கடைகள் அமைப்பதற்கான நடவடிக்கைகளை மதுரை காவல் ஆணையர் அலுவலகம் தற்போது தொடங்கியுள்ளது.
தற்காலிக பட்டாசு கடைக்கு உரிமம் பெற தமிழ்நாடு வெடிபொருள் சட்டம் மற்றும் விதிமுறைகளின் படி விருப்பமுள்ளவர்கள் இணையதளத்தில் செப்டம்பர் நான்காம் தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments