நெல்லை: ஜெபகூட்டத்திற்கு சென்றுவிட்டு திரும்பிய போது நடந்த கோர விபத்து

 


நெல்லை மாவட்டம் பணகுடி என்ற பகுதியில் ராஜன் (53) என்பவர் வசித்து வருகிறார். இவர் செங்கல் தொழிற்சாலை வைத்துள்ளார். இவருக்கு விஜய ராணி (48) என்ற மனைவி இருக்கிறார். இவர்கள் இருவரும் திருச்சியில் நடந்த ஜெபக்கூடத்திற்கு நேற்று முன்தினம் காரில் சென்றுள்ளனர். 

இதையடுத்து ஜெபத்தை முடித்துவிட்டு சொந்த ஊருக்கு காரில் திரும்பினர். இந்நிலையில் நேற்று ஏர்வாடி புறவழிச்சாலையில் கார் வந்து கொண்டிருந்தது.அப்போது ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் இருந்தார். 

அந்த சமயத்தில் முன்னாள் சென்றுக்கொண்டிருந்த லாரியின் மீது திடீரென எதிர்பாராத விதமாக கார் மோதியது. இந்த கோர விபத்தில் விஜயராணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் காயமடைந்த ராஜனை மீட்டு சிகிச்சைக்காக  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Post a Comment

0 Comments