• Breaking News

    இபிஎஸ் மீது வெடிகுண்டு வீசுவேன்...... போலீசுக்கு போன் போட்ட நபரால் பரபரப்பு......


    சென்னையில் ஆகஸ்ட் 22ஆம் தேதி காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு போன் கால் வந்தது.அந்த போன் கால் காவலர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியது. அதாவது அவசர உதவி எண் 100க்கு ஒரு நபர் கால் செய்து தென்காசி மாவட்டம் சிவகிரி பகுதியில் நடக்கப் போகும் பூலித்தேவன் ஜெயந்தி விழாவை ஒட்டி செவலில் அமைந்துள்ள அவரது சிலைக்கு மாலை அணிவிக்க அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வருவார்.

    அப்போது அவர் மீது வெடிகுண்டு வீசுவோம் என்று கூறி போனை வைத்து விட்டார்.அதோடு புளியங்குடி போலீஸ் காவல் நிலையத்திற்கும் வெடிகுண்டு வைக்கப்படும் என்று அந்த நபர் மிரட்டல் விடுத்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியான காவல்துறையினர் தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு தகவல் கொடுத்தனர். அந்த தகவலின்படி போன் கால் செய்த வாலிபரை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.

    அப்போது போன் கால் வந்த சிக்னலை போலீசார் ஆய்வு செய்தபோது தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியில் வந்து சிக்னல் இருந்தது. இதனால் தனிப்படையினர் அப்பகுதிக்கு விரைந்து சென்று போன் கால் செய்த நபரை கண்டுபிடித்துள்ளனர்.இதைத்தொடர்ந்து அந்த நபர் தென்காசி மாவட்டம் தலைவன்கோட்டை மெயின் ரோட்டை சேர்ந்த வெள்ளத்துரை(32) என்பது தெரியவந்தது.

    அதன்பின் காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தினர்.அதில் அவர் ஏற்கனவே இதே போல் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார் என்பது தெரிய வந்தது. மேலும் இது போன்ற மிரட்டல் மூலம் பொது அமைதிக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக நடந்து கொண்ட வெள்ளை துரை மீது புளியங்குடி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். அத்துடன் மாவட்ட காவல்துறை சூப்பிரண்டு சீனிவாசன் பொது அமைதிக்கு இடையூறும் ஏற்படுத்தும் வகையில் செயல்படும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை அளித்துள்ளார்.

    No comments