திருச்சி சா்வதேச விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூா், ஷாா்ஜாவுக்கும், டெல்லி, மும்பை, பெங்களூரு, சென்னை போன்ற பெருநகரங்களுக்கும் நாள்தோறும் 20-க்கும் மேற்பட்ட விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் அபுதாபியில் இருந்து திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு 173 பயணிகளுடன் இன்று காலை 6.40 மணிக்கு இண்டிகோ விமானம் வந்தடைந்தது - இதன் வாயிலாக அபுதாபில் இருந்து திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு நேரடியாக விமான சேவையை இண்டிகோ நிறுவனம் துவங்கி உள்ளது.
விமான சேவையைப் பொறுத்தமட்டில் ஒரு மூத்த விமானி (பைலட்) ஓய்வுபெறும் போதும், ஒருவிமானம் ஓய்வுபெறும்போதும், ஒரு நிறுவனத்துக்கோ அல்லது ஒரு விமான நிலையத்துக்கோ புதிய விமானம் வரும்போதும் தண்ணீா் பீரங்கி சல்யூட் அளிப்பது மரியாதைக்குரிய அடையாளமாகும். அதன்படி, அபுதாபியில் இருந்து திருச்சி சா்வதேச விமான நிலையத்துக்கு வந்த இண்டிகோ விமானத்துக்கு தண்ணீா் பீரங்கி சல்யூட் வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த விமானம் அபுதாபி - திருச்சி மார்க்கத்தில் வாரத்தில் 4 நாட்கள் இயக்கப்படும் என இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
0 Comments