கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மாவட்ட ஊராட்சி பொது நிதியின் மூலம் மின் மோட்டார் வழங்கும் விழா
கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்தை சார்ந்த பகுதியில் மாவட்ட ஊராட்சி பொது நிதியின் மூலம் கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் குடிநீர் மின் மோட்டார் வழங்கும் விழா வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரசேகர் தலைமையில் நடைபெற்றது.
இந்த விழாவில் சட்டமன்ற உறுப்பினர் டி.ஜே. கோவிந்தராஜன் அறிவுறுத்தலின்படி மாவட்ட ஊராட்சி குழு நிதியிலிருந்து மாவட்ட கவுன்சிலர் ராமஜெயம் கிராமப்புற மக்களின் குடிநீர் வசதிக்காக ஒரு லட்சத்து 81 ஆயிரம் மதிப்பில்5HP மின்மோட்டார் மற்றும் உதிரிபாகங்கள் 9 ஊராட்சிகளுக்கு வழங்கினார். அதில் எளாவூர் சுண்ணாம்புகுளம் ஒபசமுத்திரம் நத்தம் தேர்வழி பெத்திக்குப்பம் வழுதலம்பேடு ரெட்டம்பேடு ஏனாதி மேல்பாக்கம் ஊராட்சிகளுக்கு மின் மோட்டார்கள் வழங்கப்பட்டது. உடன் ஒன்பது ஊராட்சிகளை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் ஊராட்சி செயலாளர்களும் கழக நிர்வாகிகளும்.கலந்து கொண்டனர்.
No comments