டிசி வாங்க சென்ற மாணவனை அடித்து வெளுத்த ஸ்கூல் பிரின்சிபல்
மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள குவாலியரில் சிபிஎஸ் தனியார் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளி கங்ச் மில் பகுதியில் இயங்குகிறது. இந்த பள்ளியில் 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் தேர்வில் தோல்வியுற்றதாக தெரிகிறது. அந்த மாணவன் தேர்வில் தோல்வியடைந்ததால் பள்ளி படிப்பை நிறுத்தி விட முடிவு செய்தான்.
இந்த நிலையில் மாணவன் தனக்கு மாற்று சான்றிதழ் வழங்குமாறு கேட்டபோது பிரின்ஸ்பல் மாணவரிடம் பள்ளிக்கு செலுத்த வேண்டிய கட்டணம் பாக்கி இருக்கிறது என கூறியுள்ளார். மேலும் கட்டண பாக்கியத்தை செலுத்தி விட்டால் மாற்று சான்றிதழ் வழங்குவதாக கூறியதால் மாணவனுக்கும் பிரின்சிபாலுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி கைகலப்பானது. அப்போது பிரின்ஸ்பல் மற்றும் 2 ஆசிரியர்கள் இணைந்து மாணவனை கடுமையாக தாக்கியுள்ளனர். அதிலிருந்து தப்பிப்பதற்காக மாணவன் ஆசிரியர்களை தள்ளிவிட்டுள்ளார். இது குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே ஆசிரியர்கள் தாக்கியதால் காயமடைந்த மாணவன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டான். அந்த மாணவன் சிகிச்சை பெற்ற பிறகு ஆசிரியர்கள் மீது போலீசில் புகார் அளித்தான். இதே போல பிரின்ஸ்பல் தரப்பிலும் மாணவன் மீது புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
No comments