வாலிபரை உயிரோடு மண்ணுக்குள் புதைத்த சம்பவம்..... உயிரைக் காப்பாற்றிய தெருநாய்கள்......
உத்திரபிரதேசம் மாநிலம் ஆக்ராவில் ரூப் கிஷோர் (24) என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆர்டோனி பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென அங்கீத், கவுரவ், கரண், ஆகாஷ் என நான்கு பேர் சேர்ந்து கிஷோரை தாக்கியுள்ளனர். இதையடுத்து அவரது கழுத்தை நெறித்து உள்ளனர். இதில் அவர் இறந்து விட்டதாக நினைத்து அவர்களது பண்ணையில் குழி தோண்டி கிஷோரை புதைத்துள்ளனர். இதைத்தொடர்ந்து அப்பகுதியில் சுற்றித்திரிந்த தெரு நாய்கள் கிஷோர் புதைக்கப்பட்ட இடத்திற்கு சென்று தோண்ட தொடங்கியது. அப்போது திடீரென கிஷோரின் சதையை நாய்கள் பிடித்ததும் அவருக்கு சுயநினைவு வந்தது.
அதன் பின் அவர் அப்பகுதியில் இருந்து வெளியேறினார். இதைத்தொடர்ந்து அப்பகுதியில் உள்ளவர்கள் கிஷோரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கிஷோரின் தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதோடு தனது மகனை 4 பேர் சேர்ந்து வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றதாகவும் குற்றம் சாட்டினார். இந்த தகவலின் பெயரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தப்பிச் சென்ற 4 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் நிலத்தகராறின் காரணமாக உயிரோடு புதைக்கப்பட்ட வாலிபர் தெரு நாய்களால் உயிர்பிழத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
No comments