• Breaking News

    கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப் பெருக்கு..... கீழே விழுந்த உயர் மின் கோபுரம்.....

     

    காவிரி நீர் திறப்பு பகுதியில் பெய்து வரும் கனமழையின் காரணமாக மேட்டூர் அணையிலிருந்து உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் நேற்று இரவு கொள்ளிடம் ஆற்றுப்பகுதியில் 1 லட்சத்து 10 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. 

    இதனால் அங்கு தண்ணீரின் அளவு அதிகரித்ததுடன் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கொள்ளிடம் பாலத்திற்கு கீழ் இருந்த  உயர் மின் கோபுரத்தின் அடிப்பகுதி ஆற்றின் வெள்ள பெருக்கால் அருந்தது.இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் அந்த பகுதியில் துண்டிக்கப்பட்ட நிலையில் திடீரென வெள்ளம் அதிகரித்ததால் ஆற்றில் உள்ள மின் கோபுரம் சாய்ந்து கீழே விழுந்தது.

     ஆனால் அதிஷ்டவசமாக இந்த சம்பவத்தினால் எந்த வித அசம்பாவித சம்பவங்களும் ஏற்படவில்லை. மேலும் இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

    No comments